Monday, March 23, 2015

இஞ்சி நன்மைகள் (இஞ்சி கஷாயம் செய்முறை)




இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால்
 உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.
மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
*   ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா  போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.
*   பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
*   மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும்.


இஞ்சி கஷாயம் செய்முறை:


தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 - 2 இன்ச் துண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு - சுவைக்கு
துளசி இலை - 10
ஓம இலை / கற்பூரவள்ளி இலை - 1 - 2


  • இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடிக்கவும்.
  • இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  • கொதித்து பாதியாக குறைந்ததும் எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்த்தால் சளிக்கு மிகவும் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.


No comments:

Post a Comment