Sunday, March 5, 2017

Theratha vilaiyattu pillai - krishnan song dance performance

Monday, April 20, 2015

கஷாயம் குடிங்க!! - வயிறு கோளாறு / விருந்து உணவுக்கு பின்

கஷாயம் குடிங்க!!

அதிகமான பலகாரம் மற்றும் ஆகாரங்கள் உண்பதால் ஏற்படும் அஜீரணத்தை தடுக்க அவசியம் தேவை ஜீரண கஷாயம். அதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்போம்.

ஜீரண கஷாயம் 
தேவையானவை :

  • சுக்கு 
  • திப்பிலி 
  • சீரகம்
  • பெருங்காயம்
  • இந்துப்பு                  தலா  25 கிராம் 



  •  பனக்கற்கண்டு, எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப 

செய்முறை :


  • மருந்து சாமான்கள் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து நன்றாக போடி செய்துகொள்ளவும்
  • அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் சூரணம் என்கின்ற கணக்கில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கால் லிட்டராக குறுகிய பின் பருகவும்.
  • இதை வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லை, பிசிறுகள் வயிற்ருக்குள் போனாலும் தப்பில்லை 
  • கஷாயத்தை வெறுமனே குடிக்க முடியாதவர்கள் சிறிது பனக்கற்கண்டு அல்லது சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் . 


Tuesday, April 14, 2015

வெள்ளரி வெங்காய மோர்

தேவையான பொருட்கள் :

மோர் -- 2 கப்
வெள்ளரி -- ஒன்று
வெங்காயம் - ஒன்று
பெருங்காயப்பொடி -- அரை டீஸ்பூன்
ஜீரகப்பொடி -- அரை டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
கொத்துமல்லித்தழை -- ஒரு கைப்பிடி

செய்முறை:


  • வெள்ளரி, வெங்காயம் தோல் நீக்கி துருவி மிக்சியில் நைசாக அரைக்கவும்.
  • மோரில் இந்த விழுது உப்பு, பெருங்காயப்பொடி, ஜீரகப்பொடி கொத்துமல்லிசேர்த்து நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.

Monday, March 23, 2015

இஞ்சி நன்மைகள் (இஞ்சி கஷாயம் செய்முறை)




இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால்
 உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.
மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
*   ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா  போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.
*   பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
*   மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும்.


இஞ்சி கஷாயம் செய்முறை:


தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 - 2 இன்ச் துண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு - சுவைக்கு
துளசி இலை - 10
ஓம இலை / கற்பூரவள்ளி இலை - 1 - 2


  • இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடிக்கவும்.
  • இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  • கொதித்து பாதியாக குறைந்ததும் எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்த்தால் சளிக்கு மிகவும் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.


Thursday, March 19, 2015

வெயில் நேரத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

குழந்தைகளுக்கு மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் / ஆண்களுக்கும்
ஏற்ற சில உணவுகள் இதோ உங்களுக்காக
முதலில் குளிர் பானத்திலிருந்து ஆரம்பிக்கலாம்

இஞ்சி மோர்


தேவையானவை:

மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:


  • பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
  • இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.
  • கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
  • பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்